மலரவுள்ள புதிய ஆட்சியில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தர கடுமையாக உழைப்பேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, October 20th, 2019

நாம் எந்தவொரு செயற்பாட்டை முன்னெடுத்தாலும் அது மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே எமது எண்ணமாக இருந்துவறுகின்றது.
அந்தவகையில் நாம் செய்த சேவைகளையோ அன்றி பெரும்பணிகளையோ நாம் விளம்பரம் செய்வது கிடையாது. ஆனாலும் நாம் செய்த சேவைகளை இன்று பலர் உரிமைகூர முற்பட்டு மக்களால் அவர்களது முகத்திரை கிழிக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளது.

கடந்த காலத்தில் நாம் செய்த சேவைகளையும் பெரும்பணிகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எமக்கு அரசியல் அதிகாரம் அவசியம்.

ஆனால் இதுவரை எமது மக்கள் எமக்கு அதற்கான முழுமையான அரசியல் அதிகாரத்தை இதுவறை தரவில்லை.அவ்வாறான அதிகாரத்தை எமது கரங்களுக்கு வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கோட்டபய ராஜபஷ்சவின் வெற்றியை உறுதி செய்வீர்களானால் நிச்சயம் என்னால் தீர்வுகளை பெற்றுத்தர முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பளை இத்தாவில் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் நிச்சயம் மீண்டும் ஆட்சி அதிகாரங்களுக்கு வருவோம். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தட்டிக்களிக்கப்பட்டுவரும் எமது மக்களின் தீரா பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு கொடுத்து நிம்மதியான வாழ்வுக்கும் வழிவகை செய்வோம்

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்ற புதிய வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதற்காக புதுப் புது ஐக்கியங்களை உருவாக்கிவருகின்றனர். ஆனாலும் இவர்களது ஏமாற்று வித்தைகளை மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளனர்.

மக்களுக்கு உண்மையிலேயே நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சித்திரந்தால் அவர்கள் உருவாக்கிய இந்த நல்லாட்சில் அதை செய்திருக்கலாம். அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சொல்வதுபோல் அரசு ஏமாற்றுகின்றது என்று கூறினால் அரசுக்கு எதிராக ஆட்சி அமைத்து முதலாவது பாதீட்டிலேயே நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்திருக்கலாம்.
ஆனால் இவற்றை அவர்கள் செய்யவில்லை.

மாறாக எதிர்க்கட்சி தரப்பினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை கூட அவர்கள் ஆதரித்து அரசுக்கு முண்டு கொடுத்து காப்பாற்றியிருந்தனர். ஆனால் இன்று தேர்தல் வந்தவுடன் அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர்.
ஆனால் அன்று இந்த அரசு ஏமாற்றுகிறது என்று கூறி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்திருந்தால் இன்று நீராவியடி பிள்ளையார் ஆலய பிரச்சினையோ அன்றி கிண்ணியா பிரச்சினையோ கல்முனை விவகாரமோ உருவாகியிருக்காது.

இதேபோலத்தான் காணாமலாக்கப்பட்டோர் விடயமும் உள்ளது.
அதனால் தான் நான் மக்களிடம் கூறிவருகின்றேன் எங்களை நம்புங்கள் நாம் கூறும் வழிமுறையை நோக்கி அணிதிரளுங்கள் என்று.

எமது கரங்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்கள் கிடைக்குமேயானால் அடுத்த ஆட்சிக் காலத்திற்குள் தமிழ் மக்களது அதிகளவான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள கண்டுகொடுக்க எம்மால் முடியும். அதை நாம் செய்வோம். செய்விப்போம் என்றார்.

Related posts:


விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரதம...
4ஆம் தரம் முதல் பாடசாலை பாடவிதானத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான பாடம் -டக்ளஸ் தேவானந்தா அவர்களது மு...
தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே - டக்ளஸ் தேவானந்தா எம...