மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் – அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, April 3rd, 2021அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இழப்புச்செய்தி ஆழ்மன துயரை தந்துள்ளது என தெரிவித்துள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா இருண்டு கிடந்த எம் தமிழர் தேசத்தில் ஆன்மீக வெளிச்சமாக தோன்றியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இழப்புச்செய்தி குறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
குறித்த செய்திக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஆன்மீக வழிகாட்டியாக, ஒரு அருட்தந்தையாக மட்டுமன்றி, மதங்களை கடந்து சகல மக்களையும் ஆழ நேசித்தவர் ஒருவர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார் என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் துன்புற்ற தமிழ் மக்களின் மன வலிகளை கலை வடிவங்களாக தந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை நேசிக்கும் சமூக பிரஞ்சை மிக்க கலைஞர்களைஉருவாக்கியவர் என்றும் அன்புக்கும் கருணைக்கும் கைகள் உள்ளன, அவைகள் அழுவோரின் கண்ணீரை துடைக்க நீளும் எமது மக்களின் துயர் துடைக்க யாருமற்றிருந்த ஒரு சூழலில்,
மக்களின் அழுகுரல் கேட்டு அவர்களின் கண்ணீரை துடைக்க மரிய சேவியர் அடிகளாரின் கைகள் நீண்டிருந்தன என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த களத்தில் நாம் நின்றவர்கள் என்பதால், அதற்கான சில ஏற்பாடுகளை என்னிடமிருந்தும் அவர் பெற்றவர் என்பதால் எமது மக்கள் மீதான அவரது ஆழ்மன நேசிப்பை நான் நேரில் கண்டு வியந்திருக்கிறேன். இன்றும் அதை மரியாதைக்குரியதாக போற்றுகிறேன் என்றும் சுட்டிக்காட்டியதுடன் மறைந்தும் மறையாத அந்த ஒளிச்சுடருக்கு ஆழ்மன அஞ்சலி மரியாதையை செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|