மறப்போம் மன்னிப்போம் என்றால் சட்டம் ஒழுங்கு எதற்கு? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Tuesday, March 12th, 2019

கடந்தகால இன முரண்பாடுகள் காரணமாக நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பிலும், யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதும், அதன் இறுதியிலும் யுத்த களம் தவிர்ந்து நாட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற குற்றங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து உண்மை நிலைமைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி, நியாயம் மற்றும் பரிகாரங்கள் காணப்பட வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல், ‘கடந்த காலத்தை மறப்போம்’ என்ற நிலை ஏற்படுகின்ற நிலையில், அண்மையில் தென்பகுதியில் ரத்கம பகுதியில் இரண்டு வர்த்தகர்கள் அடித்துக் கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

‘எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்’ என்னும் திட்டத்திற்கு எமது மக்களும் தங்களது பங்களிப்புகளை தாராளமாகவே வழங்க முன்வார்கள். ஆனால், அதற்கு முன்பதாக எமது மக்கள் ஏனைய சமவுரிமைகள் பெற்ற மக்களாகத் திகழ வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நீதி, நியாயங்கள் வழங்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் அவர்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் அரசியல் ரீதியில் அவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்ற அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

வடக்கு என்பது தென்பகுதியின் கொள்ளைப் புறமல்ல என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். தற்போது இந்த நாடு போகின்ற போக்கினைப் பார்த்தால், தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளைப் பார்த்தால், வடக்கு இந்த நாட்டின் எல்லைப்புறமாக ஒதுக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகமே எமது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related posts: