மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன பணிகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
ஆலய நிர்வாக சபையினர் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கையினை ஆராயந்த ஆராயந்த கடற்றொழில் அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி குறித்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தவகையில், சுமார் முப்பது வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள் தமது பிரதேசத்தில் அமைந்திருந்த பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபனம் செய்ய தீர்மானித்தனர். இந்நிலையில் புனருத்தாபன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். இந்நிலையில் அமைச்சரினால் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|