மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

Wednesday, November 15th, 2017

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அப்பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்துவதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

முற்போக்கான பல திட்டங்கள் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் இல்லாமல் இல்லை. இவை நடைமுறைப்படுத்தப்பட்டு, செயல் வடிவங்கள் பெற்று, முற்றுப்பெறுவதற்கு காலங்கள் எடுக்கும். கண்டிப்பாக இத் திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டியவையாகும். இல்லையேல், எமது நாடு மேலும், மேலும் பொருளாதார பின்னடைவிற்கே தள்ளப்பட்டுவிடும் என்பது உறுதியாகும். அதே நேரம், மேற்படித் திட்டங்களில் சில முரண்பாடுகள் காணப்படுவதும், ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலான கேள்விகள் எழுவதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், நிலைபேறு அபிவிருத்திகள் என்ற வகையில் இத்திட்டங்கள் செழுமைப்படுத்தப்பட்டு, செயற்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும்வரையில் எமது மக்கள் பட்டினிச் சாவுகளை எதிர்நோக்காமல் இருப்பதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்களும் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

Untitled-6 copy

Related posts:

யாழ். மருத்துவமனையில் சிவர்களுக்கானதனிப்பிரிவுவேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள...
வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் -  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தே...
விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத் தூதருக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!