மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்றையதினம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் உட்பட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இதனிடையே இயற்கை மரணமடைந்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவருக்கான காப்புறுதிக் காசோலைகளையும்’ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
அதனடிப்படையில், இயற்கை மரணமடைந்த கடற்றொழிலாளர்களான ஏ.ஜே.எம். நிஜாம் மற்றும் கே.திருச்செல்வம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 250 ஆயிரம் ரூபாய் பெனுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|