மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்தும் விசேட ஆராய்வு!

Friday, June 17th, 2022

வெள்ளாங்குளம், அடம்பன் குளத்தினை நேரடியாக பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் நீர்வேளாண்மையை விஸ்தரித்து வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அம்பன் குளத்தில் மீன் குஞ்சு விடுவது தொடர்பாக துறைசார் திணைக்களங்களுடனும் சமூக அமைப்புக்களுடனும் கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்டத்தின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் மற்றும் அவற்றினை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விஜயம் ஒன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மேற்கொண்டார்.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் மற்றும் அவற்றினை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் மாவட்டத்தின் கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அண்மையில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது  உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய்  நஸ்ட ஈட்டினையும் இயற்கை மரணமடைந்த கடற்றொழிலாளியின்  குடும்பத்திற்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக 250,000 ரூபாய்களையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார். –

அத்துடன்  மன்னார் மாவட்டத்தில் ஆழ்கடல் பலநாள் கலன்களில் தொழில் புரிவதற்கான பயிற்சி நெறியினை நிறைவு செய்த மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கான சான்றிதழ்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: