மன்னார், பள்ளிக்குடாவில் இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, May 7th, 2021

மன்னார், பள்ளிக்குடா பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களிற்கான இறங்குதுறை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறங்குதுறை இன்மையினால் எதிரகொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று குறித்த பிரதேசத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், நிலமைகளை நேரில் அவதானித்ததுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இறங்கு துறையை அமைப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: