மனிதாபிமான ரீதியில் அவதானம் செலுத்துங்கள் – நீதி அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Thursday, November 24th, 2016

யாழ்ப்பாணம், குருநகர், பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் வாழும் மக்களது காணி பிரச்சினை தொடர்பில் நீதியமைச்சர் அவர்கள் மனிதாபிமான ரீதியில் அவதானம்  செலுத்தி அம்மக்களின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு அக்காணியை குறித்த மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையெடுத்து உதவுமாறும்  கேட்டுக்கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

யாழ்ப்பாணம், குருநகர், பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள 5ஆம் வட்டம், ஜே/67ஆம் இலக்க கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள காணியில் 1985ஆம் ஆண்டிலிருந்து சுமார் 68க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் 1991ஆம் ஆண்டு முதல் அரச நில வரிப்பணம் செலுத்தி வருவதாகவும்  கூறுகின்றனர்.

யுத்தம் காரணமாக 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்துள்ள இம்மக்கள்  2009ஆம் ஆண்டு மீண்டும் அதே காணியில் மீள் குடியேறி தங்களது பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தங்களது வசதிக்கு ஏற்றவகையில் சேதமாகிப் போயிருந்த இருப்பிடங்களை மீளப் புனரமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் காணி நீதி அமைச்சுக்குரியது என்று கூறுப்பட்டு அம்மக்களை அங்கிருந்து  வெளியேறுமாறு கோரப்பட்டு வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே  இவ்விடயம் தொடர்பில் கௌரவ நீதியமைச்சர் அவர்கள் மனிதாபிமான ரீதியில் அவதானம்  செலுத்தி அம்மக்களின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு அக்காணியை அம்மக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையெடுத்து உதவுமாறும்  கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் நீதிமன்றத்திற்கான தேவைகள் ஏற்படும்போது அதற்குப் பொருத்தமான அரச காணியை இனங்காட்ட இயலும் என்பதையும் இங்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

03

Related posts:

பேலியகொட மீன் சந்தை - இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் - மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அ...
நன்றிக்கு தலை வணங்கும் நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்...
வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் - மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...

தேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம் - டக்ளஸ் தேவானந்தா  கேள்வி!
ஈ.பி.டி.பியின் பூநகரி பிரதேச காரியாலயம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நாடாவெட்டி திறந்த...
சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன - மட்டக்களப்பு நாவலடி கடற்ற...