மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் !

Thursday, May 10th, 2018

இந்த நாட்டில் நீங்கள் கூறுவதைப் போன்று இனங்களுக்கிடையே ஒற்றுமையோ, ஒருமைப்பாடோ, தேசிய நல்லிணக்கமோ ஏற்பட வேண்டுமாயின், முதலில் புறையோடிப் போயிருக்கின்ற சில பழக்க, வழக்கங்களை மாற்றுங்கள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதித்துறை திருத்தச் சட்டமூலம், காலவிதிப்பு சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். மனதாபிமான முறையில் ஓர் அரசியல் தீரமானம் எடுத்து, தடுத்து வைத்திருக்கின்ற மேற்படி கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு முன்வாருங்கள். இதற்குத் தயாராக இல்லையேல், ஒரு விஷேட நீதிமன்ற ஏறபாடுகளை மேற்கொண்டு, இந்த வழக்குகளை விசாரித்து ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இதனை ஓர் அரசியல் முதலீடாக தொடரந்து வைத்துக் கொண்டிருக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு தொடர்ந்து பல்வேறு அநீதிகள், முறைகேடுகள் இழைக்கப்படுவதாகவும், அங்கு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அண்மையில் வவுனியா நீதிமன்றத்தில்  கைதியொருவர் பதில் நீதவான் அவர்கள் முன்னிலையில் தெரிவித்திருப்பதாக தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்விடயம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்த்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தவிரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


நீதிக்காக காத்திருக்கும் சூழலிலேயே தமிழ் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் - டக்ளஸ் எம்....
நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!
அடிமைத் தனத்தை உடைத்தெறிய தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி பாரதியார் – அமைச்சர் டக்ளஸ்...