“மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம்” – தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வ வாழ்த்துக்கள்!

தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர்.
மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம் என்ற தொனிப்பொருளின் கீழ் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த நாள் நிகழ்வுகள் மக்களால் மகிழ்சியுடன் கொண்டாடப்படுகின்றது. ஒருவருக்கொருவர் இனிப்பு பண்டங்களை பரிமாறியும் வாழ்த்துக்களை பரிமாறியும் உணர்வெளிச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சிறப்பு பூசை வழிபாடுகளை முன்னெடுத்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசி வேண்டி விசேட பூசை வழிபாடுகளையும் முன்னெடுத்திருந்ததுடன் சிரமதானம் குருதிக்கொடை உள்ளிட்ட பல்வேறு வகையிலான சமூகப்பணிகளையும் முன்னெடுத்துவருகின்றனர்
இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆசி வேண்டி மதத் தலைவர்கள் தமது ஆசிகளை வழங்கிவரும் அதேவேளை அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் தமது வாழ்த்துக்களை உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது புலம்பெயர் தேச வாழ் உறவுகளும் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|