மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Friday, April 9th, 2021யாழ்ப்பாணம் மாநகர சபையின்  எல்லைக்குட்பட்ட நகரின் சுத்தம் சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட பொலிஸ் படையணி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவ்விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பணியாளர்களை நியமித்தது அவர்களுக்கு சீருடை வழங்கியது தொடர்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய தவறுகளை அறியாத்த தவறாக கருதி மணிவண்ணனை விடுவித்து மாநகரசபையின் செயற்பாடுகளை மீ{ண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவன செய்யுமாறு இன்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டிருந்தார்

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் நேற்று இரவு யாழ் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டிருந்த மணிவண்ணன் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வவுனியாவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். நிலையில் இவ்விடயம் தொடர்பிலும் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது

இந்நிலையில் இன்று இரவு மீண்டும் யாழ் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந் நிலையில் அவரை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதுRelated posts:


தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது -  டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...
நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தே...