மட்டு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு!

Saturday, October 28th, 2017

மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மாலை அணிவித்து ஆரார்த்தி எடுத்து மகத்தான வரவேற்பை அளித்ததுடன் தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  ஒருநாள் விஜயமாக இன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை விரிவாக்கம்  செய்வது அல்லது முன்னெடுப்பது தொடர்பில் குறித்த இரண்டு மாவட்டங்களின் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் ஆதேவேளை சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தெளிவு படுத்துவதே குறித்த பயணத்தின் நோக்கமாகும்.

அதனடிப்படையில் தற்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு தற்போது நடைபெற்றுவருகின்றது.

Related posts:


பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது கூட்டமைப...
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
அநாவசிய நிறை கழிவுகளுக்கு நிரந்தரமாக விடை கொடுப்போம் - விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி !