மட்டு நகர் அரசியல் சமூக மட்ட பிரதிநிதிகளுடன் டக்ளஸ் எம்.பி சந்திப்பு!

Tuesday, November 12th, 2019


மட்டக்களப்பு அரசியல் சமூக பிரதிநிதிகளுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு மட்டு நகர அரசியல் சமூகமட்ட பிரதிநிதிகள் செயளாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு விடுத்திருந்த அழைப்பின் பெயரில் இடம்பெற்றது

இதன்போது தமிழருக்கு தற்போது வடகிழக்கில் உள்ள ஆளுமை மிக்க ஒரே தலைவராக டக்ளஸ் தேவானந்தா இருப்பதால் அவரால்தான் எமது மக்களுகுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர முடியும் என்றும் அதனால் தமிழ் மக்கள் இனிவரும் காலத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் கிழக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

அதுமட்டுமல்லாது தற்காலத்தில் யாழ்ப்பாணம் வன்னி உள்ளிட்ட வடக்கில் தனித்துவமான தமிழ் கட்சியாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவது போல் அக் கட்சியின் சேவை கிழக்கிற்கும் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன் தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதித்து காட்டிய தலைவரின் கரங்களை கிழக்கு மக்களும் பலப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது மட்டக்களப்பு செங்கலடியில் தேசிய கட்சிகளின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக சேவையாளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், வியாபாரிகள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: