மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்

Monday, October 25th, 2021


……………

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த மாவட்டங்களில் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சாத்தியமான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

அதனடிப்படையில் நாளை (26 ஆம் திகதி) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாளை மறுதினம் அம்பாறை மாவட்டத்தில் கள விஜயங்களை மேற்கொள்ள இருப்பதுடன், கடற்றொழில்சார் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

இவ்விரு மாவட்டங்களிலும் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை போன்றவற்றில் மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் மூன்று நாள் விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லை மாவட்டத்திற்கு விஜயம் : பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு!
பழிவாங்கும் மனோநிலையில் இருந்து வெளியே வாருங்கள்: காங்கேசன்துறை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...

ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் சாவற்கட்ட...
மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் - நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப...
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் - இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!