மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்தவர் அமரர் ரஞ்சித் டி சொய்சா – அனுதாபப் பிரேரணையில் அமைச்சர் டக்ளஸ் தோவனந்தா!

பல்துறை திறமைகளைக் கொண்டிருந்த ரஞ்சித் டி சொய்சா அவர்களது திடீர் மரணமானது எமது நாட்டுக்கும் நேர்மையான அரசியலுக்கும் பாரிய இழப்பாகும் என்று தெரிவித்துள்ள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்> அன்னாரினது இழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் அனுதாபத்தினையும் தெரிவித்தார்.
காலஞ்சென்ற சகோதர நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா அவர்கள் தொடர்பிலான அனுதாபப் பிரேரணை நேற்று(24.01.2020) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவான்நதா அவரகள் இதனைத் தெரிவித்;துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்றைய எமது மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்திருந்தவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா அவர்கள் முக்கியமானவர் என்றே குறிப்பிட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் வெற்றி குறித்து முன்கூட்டியே ஆரூடம் கூறியவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா அவர்கள் முதன்மையானவர் என்றே கூற வேண்டும்.
2010ஆம் ஆண்டு முதற்தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இக்காலகட்டங்களில் அவர் நாடாளுமன்றத்தில் இளைஞர் விவகாரம் விளையாட்டு> கலை மற்றும் மரபுரிமைகள் தொடர்பிலான கண்காணிப்பு செயற்குழவினதும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினது ஆலோசனை செயற்குழுவினதும் உறுப்பினராகவும் செயலாற்றியிருந்தார்.
இரத்தினபுரி மாவட்ட மக்களது அன்பை வென்ற ஒரு செயற்பாட்டு வீரராக அவர் திகழ்ந்தள்ளார் என்பதற்கு இன்றும் அம் மக்கள் அவர்மீது கொண்டுள்ள பற்றே ஆதாரமாக இருக்கின்றது.
எந்த விடயமானாலும் திறமையாக கதைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ரஞ்சித் டி சொய்சா அவர்கள் அண்மைய கட்டத்தில் நாடாளுமன்றத்திலே இருந்த பீரங்கிப் பேச்சாளர்களில் ஒருவராவார்.
அரசியல் கலந்துரையாடல்களாக இருந்தாலும்> அரசியல் வாத விவாதங்களாக இருந்தாலும், சமூக மட்டத்து பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றில் எல்லாம் கலந்து கொண்டு தனது திறமையை சான்றுபட நிரூபித்துள்ள பெருமைக்குரியவராக அன்னார் திகழ்ந்தார்.
அந்தவகையில், அன்னாரது இழப்பால் துயர் கொண்டுள்ள அனைவருடனும் ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பாகவும் எமது மக்களின் சார்பாகவும் துயரங்களைப் பகிரிந்து கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
Related posts:
|
|