மக்கள் மீதான எமது அக்கறையே நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமைந்தது – டக்ளஸ் எம்.பி!

Saturday, January 20th, 2018

எமக்கு அரசியல் பலம்  போதுமானதாக இல்லாது போனாலும்கூட மக்கள் மீதான எமது அக்கறையும் மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை மேற்கொள்வதில் எமக்குள்ள ஆர்வமுமே வடக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதுவாக அமைந்தது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்’கையில் –

யாழ்ப்பாணத்தில் நாம் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் அதனை சிறப்பாக மேற்கொள்வதற்கும் அப்பகுதி மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருந்தார்கள். எனவே அவ்வாறானதொரு மக்கள் நலன்சார்ந்த பணிகளை இந்த வவுனியா மாவட்டத்திலும் உள்ளூராட்சி சபைகளூடான பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுக்க நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கு மக்களாகிய நீங்கள் எமக்கு உரிய சந்தர்ப்பததையும் தருணத்தையும் தரவேண்டும்.

அவ்வாறானதொரு சூழல் கிடைக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக உள்ளூராட்சி சபைகளூடாக நாம் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்திக் காட்டுவோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமன்றி வடக்கு மகாணசபையையும் நாம் வென்றெடுத்து இந்த மாவட்டத்தின் பல்வேறு நிலைகளிலும் அபிவிருத்திகளை நிச்சயம் முன்னெடுப்போம்.

மக்களின் அன்றாடப் பிரச்சினை அபிவிருத்தி அரசியலுரிமைக்கான தீர்வு என்பவற்றை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வரையில் நாம் ஒருபோதும் ஓயமாட்டோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

Related posts:

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள்...
கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...
டக்ளஸ் தேவானந்தாவினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்வை பெற்றுத்தர முடியும் - யாழ் மாவட்ட ...

தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...
தடம் மாறிச் செல்லும் இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த முயற்சிப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கிராஞ்சி பகுதி கடற்றொழில் சார் மக்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத்தை உருவாக்க அமைச்சர் டக்ளஸ் தீவிர நடட...