மக்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு பெற்றுத்தரப்படும் – மறவன்புலவு காற்றலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 30th, 2019

நாம் காற்றலை மின் உற்பத்தியை எதிர்க்கவில்லை. ஆனாலும் எமது இயல்பு நிலையை பாதிக்கும் வகையில் அமைவதையே எதிர்க்கின்றோம். எமக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தாருங்கள் என கடல்தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மறவன்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

மறவன்புலவு காற்றலை மின்கம்பங்கள் அமைக்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராயும் முகமாக கடல்தொழில் மற்று நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கு நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் மக்களது அவிப்பிராயங்களையும் கேட்டறிந்துகொண்டார்.

இன்று குறித்த பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் பொதுமக்கள் சந்திப்பொன்றிலும் கலந்துகொண்டார். இதன்போது காற்றலை மின் கம்பம் அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பில் மக்களால் பல்வேறு கருத்தக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போதே அப்’பகுதி மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் ஒப்பந்ததாரர்கள் அடவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன்  கால்டைக்கான மேச்சல் தரை தற்போது கடற்கரையாகத்தான் உள்ளது.  இது அமைக்கப்படுவதால் கால்நடைகளுக்கான புற்றரை இழக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அத்துடன் வயல்கள் தென்னைமரங்கள் நிறைந்த காணிகளூடாக அமைக்கப்படுகின்றது. வீதிகள் பாதிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் மக்களிடமிருந்து கண்கள் ஏமாற்று வழியில் வாங்கப்பட்டள்ளதாகவும் நீண்டகாலமாக தமது பெயரில் நன்கொடை காணி என இருந்த காணிகளுக்கு சோலைவரி கட்டி வந்திருந்த நிலையில். 2019 ஆம் ஆண்டு அரசகாணியாக திடீரென மாற்றப்பட்டுள்ளது இது எவ்வாறு நடந்தது என கேட்டதற்கு அதிகாரிகளும் கைவிரித்துள்ளனர்

அதுமட்டமல்லாது மைதானம் அமைக்க காணி தருவதாக கூறினார்கள் அதுவும் தற்போது காணாமல் பொய்விட்டது இவற்றுக்கான தீர்வை பெற்றுத்தாருங்கள் என கோரினர்.

மக்களது பிரச்சினைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் மக்கள் பாதிக்கப்படாதவகையில் நியாயமான தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: