மக்கள் தீர்ப்பு இம்முறை திருத்தி எழுதப்படும் – டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Tuesday, January 23rd, 2018

எமது மக்கள் கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளின் சுயநலன்களுக்கள் சிக்கியமையால்தான் இன்றும் கையேந்தும் நிலைக்குள் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இன்றுவரை பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளும் இருக்கின்றனர்.

ஆனால் இன்று சுயநலவாதிகளின் பொய்முகங்களை மக்கள் தெரிந்துகொண்டுள்ளமையால்  வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தமது தீர்ப்பை திருத்தி எழுதுவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலவலகத்தில்  யாழ்ப்பாணம் கொட்டடி பிரதேச இளைஞர்களுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் கொடிய யுத்தம் ஒன்று ஆரம்பமாவதற்கு முன்னர் எமது மக்கள் நாளாந்த உழைப்புடன் நிம்மதியாக சய கௌரவத்துடனும் தான் வாழ்ந்துவந்தனர்.

ஆனால் கொடிய அழிவு யுத்தம் நாட்டில் கோரத்தாண்டவமாடியதால் மக்கள் அவலங்களையும் சேர்த்துச் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கியம் எதிர்கொள்ளப்பட்டது. எமது மக்கள் தமது சொந்தக் கால்களில் நின்று வளமான ஒரு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவுமே நாம் பல இடர்பாடுகளையும் அவதூறுகளையும் எதிர்கொண்டு இன்றுவரை எமது அரசியல் பயணத்தை மக்களுக்காக முன்னெடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் எமது மக்கள் கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளின் சுயநலன்களை இன்று உணர்ந்துள்ளனர். இதனால் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பை திருத்தி எழுதி அதை எமது வீணைச் சின்னத்திற்கு வழங்கி தமது வாழ்வியலை ஒளிமயமானதாக்கிக் கொள்வார்கள் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DSC_0527

Related posts:

எங்கள் மக்களின் இழப்புக்களுக்கு, இழப்பீட்டுக்கொடுப்பனவுகள் ஆறுதலாகவே இருக்கும். அமைச்சர் டக்ளஸ் தேவ...
காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித...
பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி ம...