மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 1st, 2018

எமது மக்கள் சுய கௌரவத்துடன் தமக்கான சொந்த நிலத்தில் வாழ்வது மட்டுமன்றி அவர்களது தொழில் துறைகளையும் நிம்மதியாக முன்னெடுக்கவேண்டும். இதற்கு வேறு ஏதாவது தடைகள் இருப்பின் நாம் அதுகண்டு ஒருபோதும் பொறுத்திருக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நயினாதீவு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

காலங்காலமாக எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் தொழில் துறைகளை மட்டுமல்லாது தமது வாழ்க்கையையும் சிறப்பாக  நடத்திவந்தார்கள். இந்த நிலையில் நாட்டிலேற்பட்ட அழிவு யுத்தம் காரணமாக மக்கள் தாங்கொணமுடியாத அவலங்களையும் துயரங்களையும் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இருந்தாலும் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் எமது மக்கள் மீதான அடக்கு முறைகளும் அசௌகரியமான நிகழ்வுகளும் இன்றும் தொடர்கின்றமையானது எமக்கு மிகுந்த வேதனையை தருகின்றது.

ஆதலினால்தான் மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதனை பாதுகாத்து முன்னெடுக்கும் வகையிலும் நாங்கள் பல செயற்றிட்டங்களை கடந்த காலங்களில் இந்த நயினாதீவிலும் முன்னெடுத்து வந்திருந்தோம்

அந்தவகையில் இந்த மக்களின் இயல்பு வாழ்வு அவர்களின் தொழில் துறைகளினூடாகவோ மதவழிபாடு உள்ளிட்ட விடயங்களிலோ எவ்விதமான அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் என்றும் உறுதியான நிலைப்பாட்டையே கொண்டுள்ளோம்.

எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலான எமது செயற்பாடுகள் எதிர்காலங்களிலும் நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்வதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்த டக்ளஸ் தோவானந்தா வேலணை பிரதேச சபையை உங்களின் ஆதரவுடன் நாம் வென்றெடுக்கும் பட்சத்தில் எங்களது அதிகாரத்தின் எல்லை வானமாகத்தான் இருக்கும் என்றும் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவ...
ஏழு கடல் மைல் சட்டம் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!