மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, February 12th, 2019

தமிழ் மக்களது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைகளானாலும் சரி  அபிவிருத்திக்களானாலும் சரி நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமானால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பலம் அதிகரிக்கப்படும்போதுதான் அதை எட்ட முடியும். அதை செய்து காட்டுவோம் என்ற நம்பிக்கையும் எம்மிடம் இருக்கிறது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொக்குவில் சூடுவிழுந்தான் பிள்ளையார் கோயில் பகுதி மக்களுடனான சந்திப்பின் போது அப்பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்த பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்கள் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆனாலும் அந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே என கூறித்திரியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு வினாடி கூட முயறிசித்திருந்தது கிடையாது. அவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவே தமிழ் மக்களது பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக்கி வருகின்றனர்.

ஆனால் நாம் அவ்வாறு ஒரு தடவை கூட எண்ணியது கிடையாது. எமது மக்கள் இதுவரை நாள் காலமாக அனுபவித்துவரும் பிரச்சினைகளுக்கும் அவர்கள் சந்தித்து அவலங்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுத்து அவர்களது வாழ்க்கை முறையை சிறப்பானதாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவே போராடி வருகின்றோம்.

இந்த மக்கள் பணிக்கான போராட்டத்தில் நாம் பல்வேறு தடைகளை மட்டுமல்லாது உயிர்த் தியாகங்களையும் கண்டிருக்கின்றோம். ஆனாலும் எமக்கு மக்களது வழங்கும் அரசியல் பலம் குறைவாகவே இதுவரை காலமும் இருந்து வருகின்றது.

நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போல எமது சுயநலன்களுக்காக சரணாகதி அரசியலை ஒருபோதும் செய்ததும் கிடையாது செய்யப்போவதுமில்லை. இனிவரும் காலங்களில் எம்மிடம் தமிழ் மக்கள் தமது முழுமையான அரசியல் அதிகாரத்தை வழங்குவார்களேயானால் ஒரு குறிகிய காலப்பகுதியில் தமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கான தீர்வை நிரந்தரமாக கண்டுதருவோம். அதற்கான பொறிமுறை எம்மிடம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றில் ...
‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
தேசிய நல்லிணக்கம் என்பது சரணாகதி அரசியல் அல்ல – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளக்கம்!