மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, May 23rd, 2017

 யாழ்ப்பாணம், மயிட்டியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகம் எமது மக்களது பாவனைக்கு இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அங்கும் படையினரின் வெடி பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை இருப்பதாகக் கூறப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

அவ்வாறு, அப் பகுதியில் இராணுவ களஞ்சியசாலை இருப்பின் அது அகற்றப்பட்டு, மேற்படி மீன்பிடித் துறைமுகத்தை எமது மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகள், பொருளாதார வளங்களைக் கொண்ட பகுதிகள், மக்கள் மீள்குடியேற்றப் பட வேண்டியப் பகுதிகளிலிருந்து படையினரது வெடி பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலைளை அகற்றி, அவற்றை மக்களுக்கு பாதகம் இல்லாத இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே உகந்ததாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஏற்கனவே சாலாவ பகுதியில் இராணுவக் களஞ்சிய சாலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பிலும் அரசு உரிய அவதானம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...
அநீதிகளை புரிகின்ற குற்றவாளிகளை விடவும் அந்த குற்றவாளிகளை காப்பாற்ற எத்தனிப்போரே அதிக பட்ச தண்டனைக்க...
குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!