மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கில் கிளிநொச்சி கண்ணகைபுரத்தில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, May 9th, 2024

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வு காணும் நோக்கிலான மக்கள்  சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற கண்ணகைபுரம் கிராமத்தின் அடிப்படை மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் ஒர் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டத்தில் ஊடக கிளிநொச்சியில் கண்ணகைபுரம் கிராமம்  தெரிவாகி அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அலங்கார மீன் வளர்ப்பு தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - ...
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை - காணி அளவீடுகள் தொடர்பி...
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் - அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நில...