மக்களை குழப்பும் நோக்கில் விஷமப் பிரசாரம்: கண்டிக்கிறது ஈ.பி.டி.பி.

Monday, August 3rd, 2020

மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியினால் கடந்த காலங்களில் சுமார் 50,000 இற்கும் மேற்பட்டவர்கள் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தினர் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அவ்வாறு இணைத்தக் கொள்ளப்பட்டவர்களை நீண்ட கால நோக்கில் வலுப்படுத்துவதற்கான பயிற்சி பட்டறையினை ஈ.பி.டி.பி. ஏற்பாடு செய்திருந்தது.

சமுர்த்தி பயனாளிகள் மத்தியில் சுயதொழில் ஆர்வத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நோக்கில் குறித்த பயிற்சி பட்டறை மேற்கொள்ளப்படவிருந்தமை தொடர்பிலேயே தவறான செய்தி விசமிகளினால் பரப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஈ.பி.டி.பி. தரப்புக்கள், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தமக்கான ஆதரவு அலையை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் அரசியல் தரப்புக்கள், மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தேர்தல் அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ளன.

அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் செயற்படும் ஈ.பி.டி.பி. கட்சி எந்தவொரு சூழலிலும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவா...
‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்த...