மக்களுக்கு வெறும் உணர்ச்சிகளை திணிப்பவர்கள் ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுவதாக இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, May 22nd, 2018

வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், முப்பதாண்டு கால யுத்தப் பாதிப்புகள் இன்னும் தங்களைவிட்டு முழுமையாக அகலாத நிலையில், அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லல் படுகின்ற எமது மக்களுக்கு வெறும் உணர்வுகளை திணித்து திசை திருப்புவதற்கு முயற்சிப்போர், ஒரு வேளை உணவளிப்பதற்கான வழியைக் காட்டுதாக இல்லை என்ற வேதனையே தொடர்கின்றது  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத் திட்டத்தின் கீழான இரு கட்டளைகள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அதிகளவிலான வரிகள் விதிப்பு, கடன்கள், கண்டபடி தண்டங்கள் விதிப்பு போன்றவற்றினாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் ஓடிக் கொண்டிருப்பதாக பொது மக்கள் நம்புகின்னர்.

இந்நிலையில், அதிகளவிலான விலையேற்றங்கள் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலே இன்னும் தீர்க்கப்படாத எமது மக்களது உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் பலவும் இருக்கின்றபோது அரசியல் தீர்வு தொடர்பில் கூடிக்கூடிக் கதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தென்பகுதியிலே கால நிலை சீர்கேடு காரணமாக சுமார் 23 ஆயிரம் பேர்வரையில் பாதிக்கப்பட்டு, 8 பேர் அளவில் உயிரிழந்துள்ள நிலையில், தென்பகுதியிலே வைரஸ் காய்ச்சல் காரணமாக சுமார் 13 பேர் வரையில் இதுவரையில் உயிரிழந்துள்ள நிலையில், பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு எமது நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: