மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

கடற்றொழிலை நம்பி வாழும் மக்களுக்கு பயனுள்ள வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் எமது அமைச்சின் செயற்பாடுகள் அமையவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்;.
கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர் திருமதி ஆர். எம். இந்துரத்நாயக்காஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்;,எமது நாட்டைச் சூழவும் கடல் வளம் இருக்கின்ற போதும், கடற்தொழில் மற்றும் அதனோடு ஒட்டியலாபம் ஈட்டும் தொழில் முயற்சிகள் போதுமான முன்னெற்றத்தை காணவில்லை. இந்த குறைபாட்டை நிவர்த்திசெய்து எமது நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் அனைவரும் ஒத்துழைப்போடும்,அர்ப்பணிப்போடும் செயற்படுவது அவசியமாகும் என்றுஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாமற்றும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா ஆகியோர் அதிகாரிகள் மத்தியில் வேண்டுகோள் விடுத்தனர்..
|
|