மக்களுக்கு நன்மையளிக்கும் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021

மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற தற்போதைய அரசாங்கம், நாட்டை முடக்கியுள்ள கொரோனாவை முற்றாக ஒழிக்க தடுப்பூசியை  இறக்குமதி செய்து  வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனைவரும் தடுப்பூசியை பெற்று நன்மையடைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

குருநகர் மீன் சந்தைக்கு இன்று விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா, சந்தையில் கடலுணவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை அவதானித்ததுடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி செயற்படுமாறு சந்தை வியாபாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு ஆலோனை வழங்கினார்.

இதன்போது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதிலுள்ள ஐயப்பாட்டை தீர்த்துவைத்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாஷையூர் மீன் சந்தையை நேரில் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக, சுகாதாரத் தரப்பினர், பொலிஸார் மற்றும் சந்தை  நிர்வாகிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
உடற்கல்வி ஆசிரியர்கள் தமது ஆசிரியர் பயிற்சிகளை யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள முடியும் – அமைச்சர் டக்ளஸ் ...
கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் ...