மக்களுக்கு சரியான வழியைக்காட்டும் தலைமை இல்லாதிருந்த  பெருங்குறையை டக்ளஸ் தேவானந்தா நிவர்த்திசெய்து வருகின்றார்!

Friday, December 22nd, 2017

ஆளுமைமிக்க தீர்க்கதரிசனமான தமிழ் அரசியல் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை இனங்கண்டுகொண்டுள்ளதனடிப்படையிலேயே அவர் பின்னே நாம் அணிவகுத்து கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் காத்திருக்கின்றோம் என யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேட்பாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

எமது மக்களுக்கு சரியான வழியைக்காட்டும் தமிழ் அரசியல் தலைமைகள் இல்லாதிருந்த பெருங்குறையை டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நிவர்த்திசெய்துவருகின்றமையானது எமக்க மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.

அந்தவகையில்தான் எமது மக்களுக்கு சரியான அரசியல் தலைமையின் வழிநடத்தலை கொண்டுசெல்லும் நோக்கில் டக்ளஸ் தேவானந்தாவை முழுமனதாக ஏற்றுக்கொண்டு அவரது கட்சி வெற்றிபெறுவதற்கான முனைப்பில் நாம் முழுமனதுடன் உழைப்போம் என திடசங்கற்பம் பூண்டுள்ளோம்

கடந்தகாலங்களில் எமது மக்களுக்கு சரியான அரசியல் தலைமை கிடைக்கப்பெற்றிருந்தால் நாம் உயிர்உடமை இழப்புக்களை சந்தித்திருக்கவேண்டிய நிலை எற்பட்டிருக்காது. அவ்வாறு தவறாக கொள்கைப்பற்றில்லாத தீர்க்கதரிசனம் இல்லாத போலித்தேசியல்வாதிகளை நாம் வெற்றிபெறச் செய்ததன் பலாபலன்களை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்

எனவே நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தீர்க்கதிரசனம் உள்ள ஆளுமை மிக்க சிறந்த தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா தான் என்பதை மக்களுக்கு உறுதியுடன் தெரிவித்தனர்.

முன்பதாக மண்டபத்தில் கூடியிருந்த வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கரவொலி எழப்பி வாழ்த்து தெரிவித்து டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்றிருந்தமை விஷேட அம்சமாகும்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைக்காக உயிர் நீத்த அனைத்து இயக்கங்களினது போராளிகளுக்கும் மக்களுக்கும் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ், இந்து சமய பாடநூல்கள் தொடர்பில் ஆக்க மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதற்கு தீர்மானம்!
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இம்மாதம் தீர்மானமிக்க உயர்மட்ட பேச்சுவார்த்தை – அமை...

ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும் – யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்களுடனான சந்திப்பில்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...
வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவ...