மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 17th, 2022


“மக்களின் அவலங்களை தீர்ப்பதில் – மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம்.  அதற்காக ஈ.பி.டி.பி   கடந்த காலங்களில் பல சவால்களையும் அசௌகரியமான சூழல்களையும்  கடந்து வந்துள்ளது. 

ஈ.பி.டி.பி.யின் வழிமுறைகளே சரியானது என்பதை வரலாறு நிரூபித்து வருகின்ற போதிலும், போதிய மக்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை.

இந்த நிலையை மாற்றவேண்டும். அதற்காக காலம் எம்மை தேடிவரப் போவதில்லை வரும் உருவாகின்ற சூழல்களை எமக்கானதாக உருவாக்க வேண்டும்”  என்று அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட  உறுப்பினர்கள் மற்றும்  பிரதேச செயற்பாட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, கட்சியின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தனது எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தினார்.

Related posts:

அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் - செய...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!