மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022

பனை – தென்னை வளம் சார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடமாராட்சி கிழக்கு பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, பிரதேசத்தில் பனை,தென்னை வள  தொழில் சார்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, சங்கத்தில் நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு புதிய நியமனங்களை  வழங்குதல் – பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற  பனை,தென்னை வளம் சார் உற்பத்திகளை உரிய முறையில் பதனிட்டு ஏனைய பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதே தன்னுடைய நோக்கமாக இருக்கின்ற நிலையில், மக்களினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்ட...
கள்ளுக்கு வரி அறவீடு என்பது யாரை ஏமாற்றுவதற்காக யார் மேற்கொள்கின்ற ஏற்பாடு? - டக்ளஸ் எம்பி கேள்வி!
முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பபடும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - ...