மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தினமும் பேசுகிறார் அமைச்சர் டக்ளஸ்: சுமந்திரன் ஆதங்கம்!

Thursday, September 24th, 2020

நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன்சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(24.09.2020) இடம்பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின்போது கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் –

பொதுமக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற செயற்பாடுகளை அவதானிக்கின்ற எனும் manthiri.lk இணையத்தளத்தின் மதிப்பீட்டில் கடந்த வருடம் அமைச்சர் 5 ஆவது சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக வரிசைப்படுத்தி கௌரவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் ...
கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு - "வின்ஞ்" பயன்படுத்த அமை...
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார்...