மக்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்படும்: கிளிநொச்சி மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, July 24th, 2020

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான அபிலாசைகளுக்கு எதிராக எந்தவிதமான அழுத்தங்கள், தடைகள் ஏற்பட்டாலும் அவை நிறைவேற்றப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி, கோணாவில் பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாங்கள் முன்வைத்த நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறைகள், வேலைத்திட்டங்கள் அதன் வழிமுறைகள் சரியானதென வரலாறு நிரூபித்து வருகின்றது.

கரைக்கிறவன் கரைத்தால் கல்லும் கரையுமென்பது போன்று, யுத்தம் நிறைவடைந்த இந்த 10 வருடத்திற்குள் முடிந்தமானவற்றை மாற்றியிருக்கின்றோம்.

ஆனால் மக்கள் எமக்கு போதிய ஆணையை தரவில்லை. விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற வகையில் தான் எமது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

எனவே  சந்தர்ப்பத்தை சரியாக பயன் படுத்தி மக்கள் ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை பலப்படுத்துங்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts: