மக்களின் தேவைகள் நியாயபூர்வமானதே – தீர்வுகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்  – மனையாவெளியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 25th, 2017

மலையாவெளி கிராம மக்களின் தேவைகள் நியாயபூர்வமானவை என்பதுடன்  அவர்களது தேவைப்பாடுகளின் அடிப்படையிலும் முன்னுரிமை அடிப்படையிலும் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டு மாவட்டத்தின் மலையாவெளி பகுதிக்கு இன்றையதினம் (25) நேரில் விஜயம் மேற்கொண்டு மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தபின்னர் கருத்த தெரிவிக்கையிலேயே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்களின் முக்கிய தேவைப்பாடுகளான வாழ்வாதாரம், சுயதொழில்வாபய்ப்புக்கள், காணிகளுக்கான உரிமங்களைப் பெற்றுக்கொள்ளுதல், சனசமூக நிலையத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தமது கோரிக்கைகளை குறித்த பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்தனர்.

இதனடிப்படையில் மக்களது கோரிக்கைகள் நியாயபூர்வமானது என்றும்  அவற்றுக்கான தீர்வகள் காணப்படவேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்த அதிகாரிகளூடாக தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

12

DSCF0684

Related posts:

யாழ்ப்பாணத்திலும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்...
நாடாளுமன்ற தேர்தல் 2020: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...