மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்குடனேயே வட்டார குழுக்களை நாம் அமைத்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர்கள் பிரதேச மற்றும் வாட்டார குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு வேலைத்திட்டத்தின் சிறந்த ஆரம்பமே வெற்றியின் முதற்படியாக அமைந்துள்ளது. அதற்கேற்றவகையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இனங்காணப்படுவது மட்டுமன்றி அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வுகாண வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
கடந்த காலங்களில் எமது கட்சி அவதூறுகளுக்கும் பொய்ப் பிரசாரங்களுக்கும் முகங்கொடுத்தபடி முடியுமானவரையில் மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வகளையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.
இதற்காக எமது கட்சி விலைமதிக்க முடியாத உயிரிழப்புகழையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருந்ததையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறான மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுப்பதற்கு எமது கட்சியைப் பலப்படுத்தவேண்டியது அவசியமானது.
எமது கட்சியைப் பலப்படுத்தி மேலும் வளர்த்தெடுப்பதனூடாகவே தீர்க்கப்படாதிருக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முடியும் என்பதை வட்டார மற்றும் பிரதேச குழுக்களின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அதுமட்டுமன்றி அதற்காக அர்ப்பணிப்புடனும் தியாக சிந்தனையுடனும் உழைக்கவேண்டும். இவ்வாறாக எமது கட்சி பலப்படும் சந்தர்ப்பத்திலேயே மக்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் அதேவேளை மக்களது வாழ்வாதாரம் மட்டுமன்றி பொருளாதாரமும் சிறந்ததொரு வளர்ச்சியைக் காணமுடியும்.
உணர்ச்சிப் பேச்சுக்களையும் உசுப்பேற்றல்களையும் நம்பி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றப்பட்டு வருவதாக மக்கள் வெளிப்படையாக கூறிவவருகின்றார்கள்.
இந்நிலையில் எதிர்காலத்திலும் மக்கள் ஏமாற்றங்காணாத வகையில் மக்களுடன் நின்று மக்களுக்காக தொடர்ச்சியாக பணிபுரியவும் சேவை செய்யவும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
அதுமட்டுமன்றி எம் மக்களின் வளமான எதிர்காலத்துக்காக சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் முகங்கொடுத்து அதில் வெற்றியையும் காணமுடியும் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
அந்தவகையில்தான் சிறந்த ஆரம்பம் வெற்றிக்க சமம் என்ற வகையில் எமத கட்சியின் கொள்கை வழிநின்று நாம் தெர்ர்ச்சியாக எமத மக்களுக்காக உழைத்தவருகின்றோம்
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கட்சியின் கொள்கை வழிநின்று எம் இலக்கை நிச்சயம் வென்றெடுப்பதுடன் எமது மக்களைப் பாதுகாத்துக்கொண்டு அவர்களது எதிர்கால வளமான வாழ்வை முன்கொண்டு செல்லமுடியும் என்றும் நம்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செயற்பாட்டாளர்களின் மக்கள் நலன்சார்ந்த பணிகள் தொடர்பாக விளக்கிய டக்ளஸ் தேவானந்தா தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கினார்.
குறிப்பாக சமூகத்தில் இன்று புரையோடிக்காணப்படுகின்ற சமூகப்பிறழ்வுகளிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து அக்கறையுடன் உழைக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும் என்றும் இங்கு வலியுறுத்தினார்.
கலந்துரையாடலுக்கு முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தென்மராட்சி பிரதேச முன்னாள் இணைப்பாளர் தோழர் மூர்த்திக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த போராளிகளுக்கும் போரின்போது உயிரிழந்த பொதுமக்களுக்கும் இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேசங்களின் நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் திலக், உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Related posts:
|
|