மக்களது வாழ்வியலை பாதிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 25th, 2017

சட்டவிரோதமான முறையில் தமது பகுதியில் நீண்ட காலமாக மணல் அகழ்ந்தெடுக்கப்பட்டு வருவதால் தமது குடியிருப்பு நிலங்கள் தாழ்நிலங்களாக்கப்பட்டு வருவதுடன் விவசாய செய்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக திருமலை மாவட்ட நாவலடி பிரதேச மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்திற்கு மூன்றுநாள் விஜயம் மேற்கொண்டு மாவட்டத்திலுள்ள மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துவரும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமே நாவலடிக்கிராம மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் –

மூவின மக்களையும் உள்ளடக்கிய பிரதேசமான இப்பகுதியில் வாழும் மக்கள்  சம்பூர் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், அவ்வாறு குடியமர்த்தப்பட்டும் இதுவரை தமக்கான வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் இதனால் தாம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை நாள்தோறும் சந்தித்துவருவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.

மேலும் தமக்கு வாழ்வாதார உதவிகள் வேலைவாய்ப்பு, சுயதொழிலுக்கான உதவிகள் உள்ளிடட்ட பல்வேறு வகையான தேவைப்பாடுகளை நிறைவு செய்து தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த  டக்ளஸ் தேவானந்தா –

மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மணல் அகழப்படுவது சட்டவிரோதமானதாகும். இந்த சட்டவிரோத செயற்பாடு உடனடியாக  நிறுத்தப்படவேண்டியது ஒன்று என தெரிவித்ததுடன். குறித்த பிரச்சினையை துறைசார்ந்த அதிகாரிகளது கவனத்திற்கு கொண்டுசென்று அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன் மக்களது பிரச்சினைகள் சரியான வகையில் அணுகப்படாத வரையில் அவர்களது வாழ்வியல் தேவைகளை என்றும் நிறைவுசெய்து கொடுக்கமுடியாது. இவ்வாறான தவறுகள் வருவதற்கு கடந்த காலங்களில் தமிழ் மக்களது தவறான அரசியல் தெரிவுகளே காரணமாகும். இந்நிலை மாற்றப்படும்போதுதான் மக்களது வாழ்வியல் தேவைகளும் முழுமையாக பூரணப்படுத்தப்படும் என தெரிவித்தார். இதன்போது கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

IMG_20170224_191505

IMG_20170224_190627

Related posts:


எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...
வங்கியில் மூலதன சிக்கல்கள் இருப்பின் அதனைத் தீர்த்துவைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு - டக்ளஸ்...
பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் - மாண...