மக்களது எதிர்காலத்திற்காக எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018

நீங்கள் நம்பிக்கையான எதிர்காலத்தை வாழ்வதற்கும் நீங்கள் வாழும் பிரதேசத்தை வளம் மிகுந்ததாக மாற்றியமைப்பதற்கும் எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் அப்பகுதி மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

இங்கு வாழும் மக்கள் வாழ்வாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தேவைப்பாடுகளுடனேயே வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனக்கு ஒரு விநாடி கிடைத்தாலும் அதை மக்களுக்கானதாகவே எப்போதும் பயன்படுத்துவதுண்டு. எதிர்காலத்திலும் மக்களுக்கான எமது பணிகள் அவ்வாறே அமையும். மக்கள் தமக்கான நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமானால் எமக்கான அரசியல் பலத்தைத் தருவதனூடாகவே அது சாத்தியமாகும் என்பதுடன் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கண்டு ஒளிமயமான வாழ்வை வாழமுடியும்.

அந்தவகையில் உங்ளது வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நீங்கள் எமக்கு அரசியல் பலத்தை தருவதனூடாகவே அது சாத்தியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

12

1

3
2

4

5

6

8

9

10


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் - டக...
வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் - பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கின்றோம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...