மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021

மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சிலாபம், புத்தளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலிருந்து 70 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 55 ஆயிரம் ரூபா பெறுமதியிலான கருவாடு உற்பத்தி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கென மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சொரவில, மாதுருஓயா பகுதிகளிலிருந்து 60 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். 

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கழு நிலை விவாதத்தில் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சு அதொடர்பான விவாதம் இடம்பெற்றது. அதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இதேநேரம் இந்திய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத, நியாயமற்ற கடற்றொழிலை தடுப்பது குறித்து, அரசியல் ரீதியிலான இராஜதந்திர முறைமையிலும், வினைத்திறன்மிக்க சட்ட அமுலாக்கல் மூலமாகவும், விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்திய கடற்றொழிலாளர்கள் 60 முதல் 75 அடி நீளமானதும், 250 முதல் 350 வரையிலான குதிரை வலு கொண்ட இரட்டை மடி இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து வருவதுடன், எமது கடற்றொழிலார்களின் தொழில் உபகரணங்களை அழித்தும், வாழ்வாதாரங்களை பாதித்தும் வருகின்றனர்.

இந்த தொழில் முறைமையானது, சர்வதேச மட்டத்தில் தடை செய்யப்பட்ட சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கண்காணிக்கப்படாத கடற்றொழில் முறைமையாகும்.

அத்துடன், பலநாட் களங்களில் படகுகள் செல்கின்ற திசை கண்காணிப்பு கருவிகளை  பொருத்துகின்ற நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இதற்கென அவுஸ்திரேலிய அரசாங்கம் 5.2 மில்லியன் டொலர் செலவில் 4,200 கருவிகளை வழங்கி வருகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்டு, தற்போது செயற்பாடுகளை இழந்துள்ள 1,200 கருவிகளுக்குப் பதிலாக நாம் புதிய கருவிகளையும் மேலதிகமாகக் கோரியுள்ளதுடன், இ;ந்த கருவிகளுடன் இணைந்தவாறு திரை மூலமாக எமது தகவல் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து பலநாட் களங்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான செய்மதி தொழில்நுட்பத்தினாலான நவீன கருவிகளையும், மீனினங்கள் அதிகமாகக் காணப்படுகின்ற இடங்களைக் காட்டக்கூடிய கருவிகளையும் நாம் அவுஸ்திரேலிய அரசிடம் கோரியுள்ளோம்.

மேலும், தற்போது செயற்பாடுகளை இழந்துள்ள 300 கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கடற்றொழில் சார்ந்த புதிய தொழில்நுட்பத்திற்கான பங்களிப்பு  திட்டத்தின் கீழ் 06 வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

மீனினங்கள் பரவலாக இருக்கக்கூடிய இடங்கள் பற்றிய தகவல்களை பரிமாறுவதற்கென தற்போதுள்ள மென் கருவிகளை மேம்படுத்தும் ஏற்பாடுகள், செயற்கை மீனினங்கள் ஒன்று சேர்க்கப்படும் கருவி (குiளா யுபபசநபயவiபெ னுநஎiஉந) பயன்பாட்டின் மூலம் மீன் குஞ்சுகளை பெருக்கும் வேலைத்திட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சூழலுக்கு நன்மை பயக்கின்ற மாற்று எரிபொருள், மற்றும் மின்சக்தி பயன்பாட்டில் கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறைக்கென களப்புகள் மற்றும் நீர் நிலைகளில் செயற்படுத்தத்தக்க புதிய படகுகளை அபிவிருத்தி செய்கின்ற வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது விக்டோரியா, ரன்தெணிகல, மேல் கொத்மலை, ரிதியகம, முருத்தவெல போன்ற நீர் நிலைகளும், மட்டக்களப்பு, ரெக்கவ, புத்தளம் போன்ற களப்புப் பகுதிகளும் இனங்காணப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அழிந்து வருகின்ற கடல் வளங்களிடையே, மீனின பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு, ஆழ்கடலில் செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் வகையில் பயன்பாட்டுக்கு உதவாத பழைய பஸ் வண்டிகள், படகுகள் மற்றும் ரயில் பெட்டிகளை கடலில் இடுகின்ற ஏற்பாட்டின் பிரகாரம், இதுவரையில்  பழைய பஸ் வண்டிகள் வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக் கடலில் இடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்பிலான சூழலியல் செயற்பாடுகளை ஆராய்வதற்கென உரிய கருவியினை கொள்வனவு செய்கின்ற ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரிதாகி வருகின்ற மீனினங்களுக்கு மாற்றீடாக மீன் குஞ்சுகளை மீள வைப்பிலிடுகின்ற வேலைத்திட்டங்கள், மீனினங்களின் பற்றாக்குறை மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் என்பன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட ரெக்கவ, பாணம, கோமரி, பெரிய உப்பு போன்ற களப்புகளில் மீன் குஞ்சுகளை வைப்பிலிட்டு, அரிதாகி வருகின்ற மீனினங்களின் பெருக்கம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

அவ்வாறே, தற்போது அறுவடை செய்யப்படாதுள்ள மீனினங்களை அறுவடை செய்வது குறித்த ஆய்வுகளும் திக்ஓவிட்ட கடற்றொழில் துறைமுகத்தின் பலநாட் களங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

களப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தைப் பொறுத்த வரையில், தற்போதைக்கு நந்திக்கடல், நாயாறு, ரெக்கவ, அறுகம்பே போன்ற களப்புகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. களப்பினை அண்டிய அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, 17 திட்டங்களுக்கென 26 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தொண்டமனாறு களப்புப் பகுதியில், 2.2 மில்லியன் ரூபா செலவில் 4 மில்லியன் இறால் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன. மட்டக்ளப்பு களப்பில் 0.825 மில்லியன் ரூபா செலவில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன.

மேலும், நீர்கொழும்பு களப்புப் பகுதிகளின் அபிவிருத்திகள் 7 கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அறுகம்பே, லங்காபட்டுன, சிலாபம், முந்தலம், ரெக்கவ, கொக்கிளாய் போன்ற களப்புகளில் எல்லையிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரம், கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்புத் திட்டம் தொடர்பிலும் நாம் அதிக அவதானத்தை எடுத்து வருகின்றோம். இதனடிப்படையில் தற்போது புத்தளம் களப்பில் 14 ஆயிரம் கொடுவா குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளதுடன், 200 பயனாளிகள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன், பெரிய நீர்த்தேக்கங்களில் கூண்டு முறை வளர்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

களப்புகளை அண்டி வாழுகின்ற கடற்றொழிலார்களது வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில், யாழ்ப்பாணம் மாவட்ட களப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 104.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நண்டு, கொடுவா, இறால், கடலட்டை போன்ற செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்றொழில் துறைமுகங்களைப் பொறுத்த வரையில், தற்போது செயற்பாட்டில் உள்ள 22 கடற்றொழில் துறைமுகங்களுக்கு மேலதிகமாக களமெட்டிய கடற்றொழில் துறைமுகத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. வெல்லமன்கர கடற்றொழில் துறைமுகத்தில் மேலும் 03 இறங்குதுறைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளன. மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.. மேலும், பருத்தித்துறை, குருநகர், பேசாலை போன்ற பகுதிகளில் கடற்றொழில் துறைமுகங்களை நிர்மாணிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பசுமை கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், பேருவலை, காலி, புராண வெல்ல, குடாவெல்ல போன்ற கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மேலும், தற்போது செயற்பாட்டில் இருந்த வருகின்ற கடற்றொழில் துறைமுகங்களில் செயற்பாடுகளின்றி தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம் மேலும் பல படகுகளுக்கான வசதிகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.

Related posts:

நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது - சர்வமத பிரதிநிதிகள் சந்தி...
வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் - நாடாளுமன்றத்தில் டக்...
 இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் - நாடாளுமன்றில் செயலாளர் ...

கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பே...
ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோ...
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு - வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக...