மகளிர்தின நிகழ்வு அர்த்தபூர்வமானதாக அமையப்பெறுதல் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா !

Sunday, March 12th, 2017

சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வாக இல்லாது அர்த்தபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையப்பெறுதல் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அராலி வீதி, ஓட்டுமடம் மாதர் சங்கத்தினரால் இன்றைய தினம் (12) ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர்தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

012

சமூகத்தில் பெண்களுக்கான அந்தஸ்தை கடந்த காலங்களிலும் சரி நிகழ்காலத்திலும் சரி உரிய முறையில் வழங்கி வருகின்றோம். அதனடிப்படையில் முன்னுதாரணமான பல செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம்.

IMG_20170312_151534

சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு அவசியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட நாம் அதற்கான செயற்திட்டங்களையும் எமது கட்சியின் நிலைப்பாட்டிற்கும் கொள்கைக்கும் அமைவாகவும் செயற்படுத்தி வருகின்றோம்.

இன்றுள்ள சூழலில் எமது எதிர்கால சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய முக்கிய கடப்பாடு பெண்களுக்கும் உரியதென்கின்ற அடிப்படையில் நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களது கருத்திட்டங்களுக்கு அமைவாக செயல்வடிவம் கொடுக்க எமது கட்சி எப்போதும் துணை நின்று வருகின்றது.

அந்த வகையில் கடந்த காலங்களில் மட்டுமன்றி எதிர்காலங்களிலும் மகளிர்தின மற்றும் ஏனைய பெண்கள் அமைப்புக்கள் சார்ந்த இவ்வாறான நிகழ்வுகள் வெறும் சம்பிரதாயபூர்வ நிகழ்வுகளாக அமையாது அவை சமூகத்திற்குச் செய்தி சொல்வதாகவும் மாற்றத்திற்கான வழிகாட்டல்களாகவும் அமைய வேண்டும். அப்போதுதான் மகளிர்தினம் போன்ற நிகழ்வுகள் சமூகத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அமையக் கூடியதாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

IMG_20170312_145331

முன்பதாக ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஓட்டுமடம் மக்கள் சார்பாக பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

மாதர் சங்கத் தலைவி திருமதி ஜெயந்தினி நாகேஸ்வரன் தலைமை உரையாற்றும் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து எமது மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான தளபாடக் கொள்வனவிற்கும் 2015ஆம் ஆண்டு தில்லைவயல் 4ஆம் ஒழுங்கை புனரமைப்பிற்கும் இப்பகுதியில் 22 பேருக்கு வாழ்வாதார உதவித் திட்டங்களுக்கும் எமது மாதர் சங்கத்தின் மேம்பாட்டிற்கென 2016ஆம் ஆண்டு நிதியுதவியையும் வழங்கியிருந்த நிலையில் நாம் இன்று பல்வேறுபட்ட வளர்ச்சிகளிலும் மேம்பாட்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

IMG_20170312_150009

அத்துடன் எமது மாதர் சங்கம் சார்பாக செழியன் வீதியைப் புனரமைத்துத் தருமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்களை அணுகி அவரிடம் எமது கோரிக்கையை முன்வைத்திருந்தோம். எமது வேண்டுகோளை ஏற்று போக்குவரத்துக்கு ஏற்றவகையில் எமது இந்த வீதியைப் புனரமைத்துத் தந்தவர் என்ற வகையில் நாம் அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை எப்போதும் செலுத்த வேண்டியது அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.

IMG_20170312_145027

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், யாழ். மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கட்சியின் யாழ்ப்பாணம் நகர பிரதேச நிர்வாகச் செயலாளருமான துரைராஜா இளங்கோ (றீகன்), யாழ். மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

IMG_20170312_144954

Related posts: