போலித் தேசியம் பேசி பாவமன்னிப்பு கேட்கிறார் சிவாஜிலிங்கம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சாட்டையடி!

Monday, November 27th, 2017
Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான இந்தப் போராட்டத்தில் முதலாவது களப் பலியாகிய பெண் போராளி எனது சகோதரியாவார். அவரையும் அவர் போன்ற பல பெண் போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூறக் கடமைப்பட்டுள்ளேன். அதற்கான தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –

இன்று ஒரு சிலர் உயிரிழந்த முன்னாள் போராளிகளை நினைவுகூறுவதாகக் கூறிக் கொண்டு. நாடகமாவடி வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும். கடந்த கால பாவங்களை கழுவிக் கொள்வதற்காக இவர்கள் இந்த நாடகங்களில் ஈடுபடுவது பரிதாபத்திற்குரிய விடயமாகும்

என்றாலும் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்வாறு கொச்சைப்படுத்தவதன் ஊடாக கடந்தகால பாவங்களுடன் கொச்சைப்படுத்தகின்ற பாவமும் சேர்ந்துவிட்டால் பிறகு எந்தச் சமுதாயத்திலும் அவர்களுக்கு பாவமன்னிப்பே கிடைக்காது.

உரிமைப் போராட்ட நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்களின் சொத்துக்களை சூரையாடி அவற்றை இந்தியாவுக்கு கொண்டுசென்று வியாபாரம் செய்து கொள்ளை இலாபம் செய்துகொண்டிருந்தவர்கள்  தமது பாவங்களை  கழுவுவதற்காக இன்று பொலித் தமிழ்த் தேசியம் பேசி பாவமன்றிப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே செய்த பாவங்களை எண்ணி இவர்கள் இப்போதாவது திருந்த முன்வருவதே எமது மக்களுக்கு அவர்கள் செய்கின்ற பேருதவியாக அமையும் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.