போதைப் பொருள் விவகாரம் தேசிய பிரச்சினையாகிவிட்டது : எதிர்கொள்ள நாட்டு மக்கள் தயாராக வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019

போதைப் பொருள் ஒழிப்பு வாரமென இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த திங்கட்கிழமை இதன் ஆரம்ப வைபவம் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்தது. அதே நேரம், அண்மையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் பிலிப்பைன் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு உதவி கோரப்பட்டதாகவும், அதற்கென ஒரு குழுவினர் இலங்கை வரவுள்ளதாகவும் ஊடகங்களின் மூலமாகத் தெரிய வருகின்றது.

போதைப் பொருள் வர்த்தகம் காரணமாக இந்த நாட்டில் நாளாந்தம் மனிதப் படுகொலைகள் இடம்பெற்று வருவதை நாங்கள் காண்கின்றோம். அண்மையில் வத்தளை பகுதியில் இருவர் கொல்லப்பட்டனர். நேற்றைக்கு முந்தைய தினம் கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு என மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

ஜனாதிபதி அவர்கள் கூறுவதைப் போன்று, ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களது அது தொடர்பிலான ஆவணங்கள் தொலைந்து போயிருக்குமானால், போதைப் பொருள் தொடர்பிலான அனைத்து அனர்த்தங்களும் இந்த நாட்டில் அழித்துவிட முடியாத ஒரு நிலையினை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, இந்த நாட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் அனைவரும் – நீதி அமைச்சு உள்ளடங்கலாக – தங்களது பங்களிப்பினை வழங்க முன்வர வேண்டியது அவசியமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கடன் இணக்க சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:


நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது - சர்வமத பிரதிநிதிகள் சந்தி...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - குருநகர் பாசையூர் பிரதேசத்தில் கடலுணவு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்...