போதைப் பொருள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 18th, 2023

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

செங்குந்தா இந்து கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வினை அடுத்து உரையாற்றிய போதே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தொடங்கி தற்போது ஐனநாயக வழியில் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவுகட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வவுனியா சண்முகபுரம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரா...
கருவாடு உற்பத்திகளை உள்நாட்டில் அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடியும் - ...