போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, January 23rd, 2019

கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளியவளையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  மிகவும் பாரதூரமானதொரு விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு, பிடிபட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் ஆவணங்கள் அனைத்தும் இன்று களவாடப்பட்டுள்ளன என்றும், அவை நீதி அமைச்சில்கூட இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இது, நீதி அமைச்சு மற்றும் நீதிமன்ற கட்டமைப்புகள் தொடர்பிலான நம்பிக்கையீனத்தையே எடுத்துக் காட்டுவதாக அமைந்நிருந்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கடன் இணக்க சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மேற்படி ஆவணங்களில் ஒன்று, இரண்டேனும் எங்காயாவது இருந்து கிடைக்குமா? எனத் தான் தேடிப் பார்க்கப் போவதாக நாட்டின் தலைவரே கூறுகின்றபோது, நீதித் துறை கட்டமைப்பின்மீது எமது மக்களுக்கு இயல்பாகவே சந்தேகம் ஏற்படக்கூடும்.

நாடாளுமன்ற கலைப்பு விவகாரம் தொடர்பிலான உயர் நீதிமன்ற தீர்ப்பினையடுத்து, இந்த நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து வருகின்ற நம்பிக்கையானது, மேற்படி கருத்து காரணமாக இழக்கப்படுகின்ற ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பில் நீதி அமைச்சு என்ன பதிலை கூறப் போகின்றது? என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது.

இதனிடையே மேற்படி ஆவணங்கள் மேற்படி ஆவணங்கள் எவையும் காணாமற்போகவில்லை என்றும், அவை நீதி அமைச்சிடம் இருப்பதாகவும் தெரிவத்து நீதி அமைச்சர் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கின்றேன் என்று அமைச்சரவையில் தெரிவித்தார் என்றும், அதற்கான ஆதாரத்தை ஜனாதிபதியடம் கையளித்தார் என்றும் மயக்கமான செய்திகள் இன்றைய ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. எனவே, ,தனது உண்மை நிலை என்ன? என்பதை அறிய விரும்புகின்றேன்.

இவ்வாறான சிக்கல்கள் நீதிக் கட்டமைப்பில் இருந்தால், இத்தகையதொரு கட்டமைப்பின் பின்னணியில்தான் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கு இதுவரையில் தீர்வுகளின்றி இழுபடுகின்றதா? என்ற கேள்வியின் முன்னால்,  தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பிலான தீர்வு குறித்து யாருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வர முடியும்? என்பதையும் இந்த இடத்தில் ஒரு கேள்வியாகவே முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts:

வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்க உடனடி நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...

தேசிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி போதனாசிரியர் வெற்றிடங்களை விரைவாக நிரப்புங்கள் - நாடாளும...
மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்...
மீன்பிடி படகு உற்பத்தியாளர்கள் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் கலந்துரையாடல்!