போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016

இம்முறை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வெகுவாகப் பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனப் போக்குவரத்து தொடர்பில் விதிக்கப்படுகின்ற அபராதங்களின் தொகை அதிகரிக்கப்பட்ட விடயமே காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் நாளாந்தம் பல கருத்துக்கள் எதிராகவும், சார்பாகவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வீதிப் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.  இந்த வருடத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் வரையில் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வீதி விபத்துக்கள் காரணமாகச்  சுமார் 2,300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. கடந்த வருடம் இதே விபத்துகள் காரணமாக சுமார் 2,500 பேர் வரையில்  உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

அபராதத் தொகைகளை மாத்திரம் அதிகரிப்பதன் மூலம் இந்த விபத்துக்களைத் தடுக்க முடியும் என எதிர்பார்த்து, இந்த அபராதத் தொகையினை அதிகரிக்கின்ற நிலையில் இதனால் அந்த இலக்கை அடைய முடியுமா என்பது குறித்து ஒரு மீள் பரிசீலனை செய்து, பின்னர் இது தொடர்பில் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்க முடியுமென நான் நம்புகின்றேன்.

00

Related posts: