போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்கம் கோரிக்கை!

Sunday, January 23rd, 2022

வடமாகாணத்தில் நிலவுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திக்கும் வகையில் இலங்கைக்கு போக்குவரத்து சபைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள  புதிய பேருந்து வண்டிகளில் ஒரு தொகுதியை வடமாகாணத்திற்கு பெற்றுத்தருமாறும் மேலும் இங்கு நிலவுகின்றன ஆளணி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

வடமாகாண இலங்கை  போக்குவரத்து ஐனநாயக ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துலையாடலின் போதே குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

Related posts: