பொலித்தீனுக்கு மாற்றீடாக பனை வளத்தையும் சேர்க்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி விலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017

எமது நாட்டை சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, பொலித்தீன் பாவiனைகளில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகின்ற நோக்கம் பற்றி இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சேதன முறையில் அழிவடையக்கூடிய மூலப் பொருட்களான வாழை, ஓலைகள், தெங்குத்தும்பு, மூங்கில் இழை போன்ற தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பனை வளத்தையும் சேர்க்கப்படல் வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சோளம் மற்றும் மரவள்ளிக் கிழங்கை மூலப் பொருளாகப் பயன்படுத்தி புதிய ‘லஞ்சீற்’ வகைளை சிவில் பொறியியலாளரான அமில் பிரியந்த என்பவர் கண்டுபிடித்திருப்பதாகவும், மேலும், பைகள், ‘சிலி கவர்’ பெட்டிகளையும் மேற்படி மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. இது வரவேற்கத்ததொரு முயற்சியாகும். எமது நாட்டைப் பொறுத்தவரையில் தற்போது நாளொன்றுக்கு ஒன்றரை மில்லியன் ‘லஞ்சீற்றுகளும’;, 2 மில்லியன் ‘சொப்பிங் பேக்’குகளும் உபயோகப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வரும் நிலையில், மிகைத்த சூழல் பாதிப்பினைக் கட்டப்படுத்துவதற்கும், சோளம், மரவள்ளி போன்ற பயிர்ச் செய்கைளை ஊக்குவிப்பதற்கும் மேற்படி புதிய கண்டுபிடிப்பு வழிவகுக்குமென்றே கருதுகின்றேன்.

மேலும், யாழ் மாவட்டத்திலே சின்ன வெங்காயச் செய்கை பெரிதும் பாதிப்பிற்குள்ளான நிலையை அடைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளதுடன், வெளிநாட்டு சிறிய ரக வெங்காயத்துடன் கலந்து யாழப்;பாணத்து சின்ன வெங்காயத்தினை விற்கின்ற நிலைமைகளும் உருவாகியுள்ளன. அந்த வகையில் கடந்த ஆண்டில் 71 ஆயிரத்து 493 மெற்றிக் தொன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள யாழ் மாவட்டத்தில் இந்த வருடத்தில் 2 ஆயிரத்து 418 ஹெக்டயார் இலக்கு வைக்கப்பட்டும், 966 ஹெக்டயாரே பெறப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. மேற்படி சின்ன வெங்காய உற்பத்தியை திறம்பட ஊக்குவிப்பதன் ஊடாக, உள்@ர் தேவைகள் போக ஏற்றுமதி பங்களிப்பினையும் பெறக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், வரட்சி நிலைமை, காலநிலை முரண்பாடுகள், விலை தளம்பல் போன்ற பல்வேறு காரணிகளால் பெரிதும் பாதிப்படைந்துள்ள யாழ் மாவட்டத்தின் உருளைக் கிழங்கு செய்கையாளர்கள் தமக்கான விதை உருளைக்கிழங்கு மானியத்தினை எதிர்பார்த்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலும் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். – என்றார்.

Related posts:


அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக...
அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...