பொன்னாலைப் பகுதி மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!
Monday, November 6th, 2017
பொன்னாலையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் பிரச்சனைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.
பொன்னாலைச் சந்திப்பகுதியில் 60 குடும்பங்களுக்கான வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு புதிய வீடுகள் அமைக்கப்பட்டு வரும் காணியில் மழை நீர் தேங்கியுள்ளதனால் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பாகவும் இதனால் மலேரியா,டெங்கு போன்ற தொற்று நோய்த் தாக்கங்களுக்கு தாம் இலக்காக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அப்பகுதியில் நீர் தேங்காத வகையில் மண் நிரப்ப வேண்டியதன் அவசியத்தையும் மக்கள் இதன்போது டக்ளஸ் தேவானந்தாவிடம் வலியுறுத்தி உள்ளனர்.
Related posts:
|
|