பேலியகொட மீன் சந்தையின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்கவும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு !

Monday, December 2nd, 2019

பேலியகொடயில் அமைந்துள்ள மத்திய மீன் விற்பனைச் சந்தை கட்டிடத்தொகுதியின் வெளிப்புற வீதிக் கட்டமைப்பின் மறு சீரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு கால்வாய் புனரமைப்புப் போன்ற பணிகளை விரைந்து முன்னெடுக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் கலந்துக் கொண்டிருந்த அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் சணத் நிசாந்த பெரேரா, அமைச்சின் செயலாளர் திருமதி. ஆர்.எம்.ஐ. இரத்னாயக்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரனவீர மற்றும் அமைச்சின் அதிகாரிகள் துறைசாரா அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்தக்காரர்கள், சந்தைத்தொகுதி விற்பனை நிலைய ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.


மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! - டக்ளஸ் தேவானந...
துறையூர் ஐயனார் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!
அரசியல் கலாசாரங்கள் மாற்றப்பட வேண்டும்  - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
நுண்கடன் முறைமை முற்றாக தடைசெய்யப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகுங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் மத...