பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

பேரம் பேசும் அரசியல் அதிகாரம் எனக்கு கிடைக்கும் பட்சத்தில் எமது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தர முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறையில் இன்றைய தினம் கட்சி ஆதரவாள்களிற்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இயல்பு சூழல் ஓரளவு தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் எமது மக்களின் வாழ்வியலில் போதுமான மாற்றங்கள் ஏற்படவில்லை.
ஆனாலும், கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும், சந்தர்ப்பங்களையும் உரிய முறையில் நாம் பயன்படுத்தி முடியுமான அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல விடயங்களையும் முன்னெடுத்திருந்தோம்.
நாம் இந்த ஆட்சியில் தொடர்ந்து இருந்தாலோ அல்லது முன்னைய ஆட்சி தொட்ந்திருந்தாலோ நான் எமது மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை நிச்சயமாக கொண்டுவந்திருப்பேன்.
ஆனால் கிடைக்கப்பெற்ற அதிகளவிலான நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை அதிகாரங்களை பெற்றோர் மக்களின் நலன் சார்ந்து உளைக்காமல் இருக்கின்றமையானது துரதிஸ்ர வசமானதே.
இந்நிலையில் தான் மக்கள் எமக்கு பேரம் பேசும் அரசியல் பலத்தினூடான அதிகாரத்தை தருவார்களே ஆனால் நாம் மக்களின்வாழ்வியல் முன்னேற்றங்களை மட்டுமல்லாது அபிவிருத்திகளையும் நிச்சயம் முன்னெடுக்க முடியும் என்பதையும் திடமாக குறப்பிட விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.



Related posts:
“விவசாய நிலத்திற்கு மின்சாரம்” அங்குரார்ப்பண நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!
|
|