பேசாலை ரின்மீ்ன் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை !

Saturday, May 23rd, 2020

மன்னாருக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை   மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஜஸ் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு வருகை தந்திருந்த பிரதேச மக்களினால் ரின் மீன் ஆலையை மீள இயக்குவது தொடர்பான கோரிக்கை  முன்வைக்கப்பட்டது.

சுமார் கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த ரின்மீன் தொழிற்சாலையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான குறித்த ரின்மீன் தொழிற்சாலையை மீளச் செயற்படுத்துவதன் ஊடாக சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என்று  பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த அமைச்சர், உடனடியாக துறைசார் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு குறித்த தொழிற்சாலையை மீளச் செய்படுத்துவது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகம் இன்று காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்திந்தார்.

Related posts:

வடக்கிற்கென தனியான வங்கி ஒன்றை நிறுவி மக்களுக்கு உதவவேண்டும் -  யாழ்.வர்த்தகர் சந்திப்பில் டக்ளஸ் தே...
யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள்...
எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்...

வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பின...
புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்-  செயலாளர் நாயகம் டக்...
வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி...