பெருமளவில் திரண்டுவந்த முல்லை மக்கள். டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, September 12th, 2016

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தமது பிரச்சினைககள் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் மேற்படி சந்திப்பு இன்றையதினம் (12) இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் தமது வாழ்வாதாரம், வீடமைப்பு வசதி, கல்வி போக்குவரத்து, காணி உரிமம், சுயதொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவர்த்தி செய்வதில் தாம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துவிளக்கினர்.

1

மக்களின் கோரிக்கைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா ஏககாலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு துறைசார்ந்தவர்களூடாக உரிய முயற்சிகள் முன்னெடுப்படும் என தெரிவித்தார்.

3

குறித்த சந்திப்பின்போது கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் யுத்த காலங்களின்போது தாம் எதிர்கொண்ட அவலங்களையும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் தெளிவுபடுத்தியிருந்த அதேவேளை இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் கைது செய்யப்பட்டு காணாமல்போன தமது உறவுகள் தொடர்பாகவும் சிறைகளில் வாடும் தமது உறவுகள் தொடர்பாகவும்  தாம் ஏக்கமூம் கவலையும் கலந்த வாழ்க்கையையே வாழ்ந்து வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தாவுடனான இன்றைய சந்திப்பு நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இன்றைய சந்திப்பு தமக்கு மிகுந்த மன மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

5

2

Related posts:


டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
தவறான வழிநடத்தலிலிருந்து விடுபட்டு சரியான வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் ...
இந்திய கடற்றொழிலாளர் விவகாரத்தை சிலர் தவறாகச் சித்தரித்து வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்...